• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

பீர்க்கன்காரணை முதல் வளசரவாக்கம் வரை தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள், நகைகள் பறிமுதல்

சென்னை: பீர்க்கன்காரணையில் கடந்த புதன்கிழமை இரவு நடந்து சென்ற முதியவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் பறித்தனர். அதனை தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற மின் வாரிய ஊழியர் அரிநெல்சன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறித்துச் சென்றனர். அதனை தொடர்ந்து அவர்கள் மதுரவாயல் – தாம்பரம் செல்லும் பைபாஸ் சாலையை ஒட்டிய தரப்பாக்கம் சர்வீஸ் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த அருண்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 3 பவுன் நகை, 3 செல்போன்கள் மற்றும் ரூ.3 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அதன்பிறகு வளசரவாக்கம் ஸ்ரீலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு, சுரேந்தரை கத்தியால் வெட்டினர். பின்னர் லட்சுமியிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்து சென்றனர். ஒரே நாள் இரவில் 4 பேர் கொண்ட கும்பல் பீர்க்கன்காரணை முதல் வளசரவாக்கம் வரை தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிள், செல்போன், நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மர்ம கும்பலை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பீர்க்கன்காரணையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளின் நம்பரை வைத்தும் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளில் ஒன்று பீர்க்கன்காரணையில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காவல்துறையினர் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது அவர்கள் காவல்துறையினரை அரிவாளால் தாக்க முயன்றதாகவும், கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்தன் (23) தாம்பரத்தை சேர்ந்த பிரகாஷ் (23) குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்த கோகுல் (20) குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த பச்சை(என்ற) அருண்(19) என தெரியவந்தது. கைது செய்யப்பட்டு உள்ள 4 வாலிபர்கள் தான் கடந்த வாரம் பீர்க்கன்காரணை முதல் வளசரவாக்கம் வரை தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். அரவிந்தன் தான் வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்து உள்ளார். இவர் மீது ஏற்கனவே சங்கிலி பறிப்பு, வழிப்பறி என 10–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2 மாதங்களில் இவர்கள் 4 பேரும் விருகம்பாக்கம், கே.கே.நகர், குமரன் நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 13 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக திருநங்கைகளை மிரட்டி பணம் பறித்து வந்து உள்ளனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது அரவிந்தன் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், 6 மோட்டார்சைக்கிள்கள், 6 செல்போன்கள் மற்றும் 2 கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு காவல்துறையினர் கூறினர். மேலும், கடந்த சனிக்கிழமை இந்த தொடர் வழிப்பறி சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள 4 வாலிபர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என தெரியவந்து உள்ளது. இருந்த போதிலும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் வேறு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DifiJTEtXFo5FazzpRn.nHbxnOWQKCS.lVrl3JIr5.r91HJhbXOt