• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

சேரன்மாதேவியில் பொதுப்பணித்துறை ஊழியர் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது மது குடிப்பதற்கு இடையூறு செய்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கொட்டாளர் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(46). இவர், அங்குள்ள பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இசக்கி அம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சேரன்மாதேவி மேல தெற்குத் தெருவிலுள்ள பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு பின்பகுதியில் மாசானமூர்த்தி கோவில் உள்ளது. இது செல்லையாவின் குல தெய்வக் கோவிலாகும்.
இந்த கோவிலில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொடை நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பணியில் செல்லையா ஆர்வம் காட்டி வந்தார். அத்துடன் ஊரில் உள்ள நாட்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டு, மாலையில் கோவிலுக்குச் சென்று பராமரிப்பு செய்வது மற்றும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோவில் அருகில் இருளில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவருடைய உறவினர்களும், பொதுமக்களும் நேற்று முன்தினம் இரவில் சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என மைக் மூலம் போலீஸ் சூப்பிரண்டு அறிவித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சேரன்மாதேவியில் பதற்றம் நிலவியதால் இரவு முழுவதும் பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
காவல் கண்காணிப்;பாளர் திரு.விக்ரமன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கண்காணிப்பாளர் திரு.ராசேந்திரன், ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த கொலை வழக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சேரன்மாதேவி தேரடி தெருவைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவரையும், ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவரையும் போலீசார் பிடித்தனர்.
அந்த 2பேரும் செல்லையாவை கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
நாங்கள் 2பேரும் 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுடைய கூட்டாளிகளான சேரன்மாதேவி கீழத்தெரு மாரிக்குமார் மகன் இசக்கிராஜ்(20), அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரி என்ற ராசுக்குட்டி(20) ஆகியோருடன், நாங்கள் அடிக்கடி மாசானமூர்த்தி கோவில் பகுதியில் மது குடிப்பது வாடிக்கை.
கடந்த மாதம் அந்த கோவில் கொடை நடந்ததை தொடர்ந்து, கோவில் பகுதியில் இருந்த புதர்கள் எல்லாம் அகற்றப்பட்டு சுத்தமாக இருந்ததால், நாங்கள் மது குடிக்க வசதியாக இருந்தது. இந்த நிலையில், கோவிலுக்கு செல்லையா அடிக்கடி வந்து செல்வார். அவர் வரும் போது வழியில் நாங்கள் மது அருந்துவதை பார்த்து செல்வார்.
அவர் போலீசாரிடம் வாய் மொழியாக புகார் செய்ததை தொடர்ந்து, போலீசார் இந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது எங்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். அத்துடன் அடிக்கடி இந்த பகுதியில் போலீசார் வந்து எங்களை தொந்தரவு செய்து வந்தனர்.
இதற்கு செல்லையா தான் காரணம் என்பதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். சம்பவத்தன்று மாலையில் அவர் கோவிலுக்குச் செல்வதை பார்த்தோம். இரவில் கோவிலில் இருந்து திரும்பி வந்தேபாது இருளில் மறைந்திருந்த நாங்கள் 4 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டோம். எங்கள் வீட்டருகில் வைத்து போலீசார் 2பேரையும் பிடித்து விட்டனர், என தெரிவித்தனர்.
அந்த 2பேர் கொடுத் தகவலின் பேரில் நேற்று காலையில் தலைமறைவாக இருந்த இசக்கிராஜ்(20), மாரி என்ற ராசுக்குட்டி(20) ஆகிய 2பேரையும் பிடித்தனர். இந்த 2 பேரும் பிளஸ்2 முடித்துள்ளனர். சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜ், மாரி உள்ளிட்ட 4 வாலிபர்களையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
கொலையான செல்லையா உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சேரன்மாதேவி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அவருடைய உடல், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அதுவரை சேரன்மாதேவியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சேரன்மாதேவியில் பதற்றம் தணிந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து போலீசார் பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DnL5hxdZjMPoDA0yyvpqfp5Obkj.WouGPkxaCgTKQ4pSxv1AKZIO