• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

தமிழக– கேரள எல்லைகளில் 35 மாவோயிஸ்டு புகைப்படங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை

நீலகிரி: கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், கண்ணனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் வனங்களை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் அதிரடியாக புகுந்து தங்களது கொள்கைகளை ஆதிவாசி மக்களிடம் பரப்பி வருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராக தங்களுடைய இயக்கத்தில் சேர்ந்து போராட வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனால் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் கேரள– தமிழக போலீசார் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் தமிழக வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாமல் இருக்க அதிரடிப்படை போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22–ந் தேதி மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா தலைமையிலான மாவோயிஸ்டுகள் நீலகிரி வனப்பகுதியில் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியது. இதனால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக– கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை ஒட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லி, மானந்தவாடி, நிலம்பூர், அகழி, அட்டப்பாடி வழியாக ஊடுருவி கோவை மாவட்ட வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதனால் கேரள– கர்நாடகா போலீசாரால் தேடப்படும் 35 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை தமிழக போலீசார் வெளியிட்டு உள்ளனர். மேலும் மாவோயிஸ்டு நடமாட்டம் குறித்த தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு பரிசு தொகையும் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பூக்கோட்டு பாடம் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனால் தமிழக– கேரள எல்லைகளில் உள்ள கோவை, நீலகிரி மாவட்ட வனம் மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கர்நாடகாவை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா, கேரளாவை சேர்ந்த சோமன் உள்பட 35 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் கோவை மாவட்டம் காரமடை, ஆனைக்கட்டி, பில்லூர் அணை, மாங்கரை, வாளையாறு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழக–கேரள எல்லையோரங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DrfOr05ol16mWUEs6W08u8fAj/NdEt4Ls0P2gKyobHqxzmo.WiBq