• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1 கோடி செம்மரக் கட்டைகள், காருடன் பறிமுதல் சென்னை பல் டாக்டர் உள்பட 3 பேர் கைது

வேலூர்;:திருப்பதி அருகே கரகம்பாடி செல்லும் சாலையில் முத்தியாலம்மன் கோவில் அருகே வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக திருப்பதி சிறப்புக்காவல் படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்தத் தகவலின் படி செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு, 3 பேர் செம்மரக் கட்டைகளை ஒரு காரில் ஏற்றிக்கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை, போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் சென்னை செங்குன்றம் பகுதியில் பல் மருத்துவராக இருக்கும் டாக்டர் சக்திவேல் மற்றும் வைகோ.ரவி, பிச்சாட்டூர் பாபு என்று தெரிய வந்தது.
பல் டாக்டர் சக்திவேல் சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கும், சர்வதேச செம்மரக் கடத்தல்காரரான அலிபாய் என்பவருடன் தொடர்பு உள்ளது. டாக்டர் சக்திவேலின் தம்பி மோகன். அவர், சென்னையில் இருந்து கொண்டே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். மோகனும், அவரது நண்பர் கோதண்டமும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் சக்திவேல், வைகோ.ரவி, பிச்சாட்டூர் பாபு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை சிறப்புக்காவல் படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான 3 பேர் மீதும், ஏற்கனவே திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் செம்மரக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் திருப்பதி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DPhvP.szSp4Ktl7Uvz5JSVY5Sbb5ogQsUrcVQAD3XOifKB9PsmPb