• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

மதுரையில் பரபரப்பு பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் ரூ.5 லட்சத்துக்கு விலைபேசிய பெண்கள் சிக்கினர்

மதுரை: மதுரை ஆனையூர் குலமங்கலம் மெயின் ரோடு முடக்காத்தான் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கடந்த 11-ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை வளர்க்க அதன் தாய் விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள கே.கே. நகரில் மாற்றுத்திறனாளி, விதவை, கணவால் கைவிட்டப்பட்ட பெண்கள் காப்பகம் நடத்தி வரும் சித்ராபாய் என்ற முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பச்சிளங்குழந்தையை சித்ராபாய், அவரது தம்பி பிரபாகரன், ஷிபா, பத்மா ஆகியோர் காரில் வந்து முடக்காத்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து வாங்கிக் கொண்டு கே.கே.நகரில் உள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த குழந்தையை விலைக்கு விற்பது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சுறுசுறுப்பான போலீசார்
    இது பற்றிய விவரம் சித்ராபாயின் டிரைவர் சீனிவாசன் மூலமாக மதுரை எல்லீஸ் நகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சைல்டு லைன் அமைப்புக்கு தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்த விவரங்களை கூடல்புதூர் போலீசாரிடம்தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் போலீசாரும் விரைந்து செயல்பட்டு கே.கே.நகரில் உள்ள காப்பகத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த சித்ராபாயின் உதவியாளர் கவிதாவிடம் குழந்தை குறித்து துருவி துருவி விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி மறுத்து விட்டார். காப்பகத்துக்குள் புகுந்து காவல்துறையினர் தேடிப்பார்த்த போது அங்கு குழந்தை இல்லாதது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சித்ராபாயின் டிரைவர் சீனிவாசனிடம் பேசி குழந்தையை விலைக்கு வாங்குவது போல் காப்பகத்தில் போலீசார் பேசினர். அப்போது அவர்கள் தங்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே தான் குழந்தை வேண்டும் என்று கேட்கிறோம். உதவுங்கள் என்று கேட்டுள்ளனர்.
இதன்பின் குழந்தையை விலைக்குத் தருவதாக ஒத்துக் கொண்டு விலை பேசி உள்ளனர். குழந்தைக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை விலை பேசியதாக தெரிகிறது. இந்த பேரத்துக்கு ஒத்துக் கொண்டதை தொடர்ந்து குழந்தையை பார்க்க வேண்டும் தெரிவித்துள்ளனர். அதன்படி கே.கே.நகர் காப்பகத்துக்கு ஏற்கனவே சென்ற போலீசார் அல்லாமல் சீருடை அணியாத வேறு சிலர் சென்றனர்.
அவர்களை அங்கிருந்த கவிதா திருமங்கலத்தில் உள்ள மறவன்குளம் என்ற இடத்தில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு மறைந்து இருந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு சைல்டுலைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற பாக்கியலட்சுமி, கவிதாவை பிடித்து கூடல் புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஆய்வாளர் ரெஜினா விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கே.கே. நகரில் உள்ள காப்பகத்துக்கு சென்று சித்ராபாய், அவரது தம்பி பிரபாகரன், இவரது மனைவி பத்மா ஆகியோரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$D81QOvTgM7nwUYjcy5O.2CAi7K6IITyTPLxZnaYIcgp9bTRf8bR/