• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

போலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி

போலீஸ் நியுஸ் பிளஸ் மின்னிதழ் பிரத்தியேகமான 'தமிழ்நாட்டு காவல்துறை' பற்றிய இணையதள நற்செய்தி மின்னிதழ் ஆகும்.  காவல்துறை என்றாலே மக்களிடையே மிக தவறான கருத்து நிலவுகிறது. தவறுகள், ஊழல்கள் எல்லா துறைகளிலிலும் நடைபெற தான் செய்கின்றது. கடந்த 65 ஆண்டு கால ஜனநாயக இந்தியாவில் ஊழல், தவறுகள் இல்லாத ஒரு துறையையும் யாராலும் கூற முடியாது. அலைகற்றை ஊழலில் துவங்கி சவப்பெட்டி ஊழல் வரைக்கும் இதில் அடங்காத துறை இல்லை எனலாம்.       பணி மற்றும் சேவை அடிப்படையில் ஒப்பிடும் போது, காவல்துறையின் செயல்பாடு பாராட்டுதற்குரியது. நமது காவலர்கள் பொதுமக்களுக்காகவும், நாட்டிற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்கள் இப்படி எந்த ஒரு நாட்களையும் இவர்களுக்காக எடுத்துக் கொள்ளாமல் நாம் (பொதுமக்கள்) குடும்பத்துடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரம், நம் பாதுகாப்பு கருதி காவலர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு எங்காவது ஒரு பகுதியில் ரோந்து  பணியில் இருப்பார்கள். பண்டிகை போன்ற விஷேசமான நாட்களில் நாமெல்லாம் நம் வீட்டில் சமைத்து அறுசுவை உணவை குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கும் வேளையில் நமது காவலர்கள் பந்தோபஸ்து என்ற பெயரில் எங்கோ ஒரிடத்தில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பாதுகாப்பு கருதி பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு நேரத்திற்கு சரியாக சாப்பிடக்கூட உணவு கிடைப்பதில்லை.
    காவல்துறையில் சாதனை புரிந்தோர் ஏராளமானோர். ஓர் வெள்ளை தாளில் உள்ள கரும்புள்ளி தான் அனைவரின் கண்களுக்கும் தென்படும், மீதமுள்ள வெள்ளை பெரிய பரப்பளவு உள்ள தாள் நம் கண்களுக்கு தெரியாது. அதுபோல நாட்டில் நடந்த குற்றங்களுக்காக காவல்துறையை ஏளனம் செய்பவர்கள் தான் ஏராளம். ஆனால் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட குற்றங்கள், கட்டுப்படுத்தப்பட்ட வன்முறைகள், தடுக்கப்பட்ட கொலைகள், கலைக்கப்பட்;ட கலவரங்கள் போன்ற எண்ணற்ற செயல்களுக்காக யாரும் அவர்களை பாராட்டுவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை.  இந்த போலீஸ் நியூஸ் பிளஸ் மின்னிதழில் நம் காவலர்களின் நற்செய்திகள் மட்டுமே இடம் பெறும்.  இனி நம் அன்றாட வாழ்வை பாதுகாக்க பணிபுரியும் காவலர்களை பார்க்கும்போது  ஊக்கப்படுத்துவோம்.

ஒர் சல்யூட் மூலமாக...

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DqlOUpaFlztUWXWETL4YqqUknEeKCmY6yLsCDgrJ9rPcI/Fr3FEb